லால் சலாம் மொய்தீன் பாயின் நியூ லுக் இதுதான்.. ட்ரெண்டிங் புகைப்படம்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதை கொண்டாடும் விதமாக ஜெயிலர் படக்குழு கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது.

அடுத்ததாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் போன்ற நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

மேலும் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் லால் சலாம் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதில் ரஜினி கோட், குல்லா போட்டு மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் இருந்தார். மேலும் லால் சலாம் படத்திற்கு மோசமான விமர்சனங்கள் எழுந்தது.

அதுமட்டுமின்றி இதனால் ஜெயிலர் படத்தின் எதிர்பார்ப்பு குறையும் என்ற பயமும் நெல்சனுக்கு இருந்தது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில் ரஜினி வேஷ்டி, சட்டை, குல்லா என வெள்ளை நிற ஆடையில் இருக்கிறார். இதன் மூலம் மொய்தீன் பாயின் நியூ லுக்கை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள். மேலும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு லால் சலாம் படத்தில் ரஜினி முஸ்லிமாக நடிக்கிறார்.

ஆரம்ப காலத்திலிருந்து ரஜினிக்கு முஸ்லிம் நண்பர்கள் அதிகம். அதனால் தான் பாட்ஷா படத்தில் முஸ்லிமின் பெயர் வைக்கப்பட்டது என்று இப்போது தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போது ரஜினி லால் சலாமில் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

rajini-lalsalaam
rajini-lal-salaam