ரஜினிக்கு, சூப்பர் ஸ்டார் பட்டம் ஒன்னும் அவ்வளவு ஈசியாக இவருக்கு கிடைக்கவில்லை. இவர் சினிமாவிற்கு வந்து நுழைந்ததிலிருந்து பல தோல்விகளையும், போராட்டங்களையும் கடந்த பிறகு தான் ஒரு நடிகராகவே அங்கீகரிக்கப்பட்டார். அதன் மூலம் அடுத்தடுத்த படங்களை சரியாக தேர்வு செய்து வெற்றி நாயகனாக வலம் வந்தார்.
இதற்கிடையில் நிறைய தோல்விகளை சந்தித்தாலும் துவண்டு போகாமல் நடித்து தற்போது நம் முன்னாடி சூப்பர் ஸ்டார் ஆக வளர்ந்து இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் வளரும்போது இவருடைய சம்பளமும் அதிகரித்துவிட்டது. அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சமீப காலம் வரை இவர் தான் இருந்தார். ஆனால் தற்போது தான் விஜய் இவரை விட அதிக சம்பளம் வாங்குகிறார்.
ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய்யின் சம்பளம் அதிகரித்துவிட்டால் உடனே சூப்பர் ஸ்டாராக ஆகிவிட முடியுமா என்ன. ஆனால் இவருடைய ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் என்றால் அடுத்து விஜய்க்கு மட்டும்தான் பொருந்தும் என்று பல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
என்னதான் ரஜினி பதவிக்கு ஆசைப்படாதவராக இருந்தாலும் தனக்கு கிடைத்த பதவி மற்றவருக்கு ஈசியாக விட்டுக் கொடுத்திட முடியாது. அது தான் தற்போது இவருடைய மனநிலைமையும் கூட. இதுவரை ரஜினி இரண்டு வருடத்திற்கு ஒரு படம் அல்லது வருடத்திற்கு ஒரு படமாக கொடுத்து வந்தவர், இப்பொழுது இருக்கும் போட்டியால் அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட் ஆகி நடிக்க இருக்கிறார்.
அடுத்ததாக லோகேஷ் உடன் இணையும் படம் தான் கடைசி என ரஜினி முடிவெடுத்துவிட்டார் என்று கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக இது ரஜினியின் கடைசி படமாக இருக்காது. அதற்கு காரணம் கண்டிப்பாக லோகேஷ் மற்றும் ரஜினி இணையும் படம் அதிரி புதிரியாகத் தான் ஹிட் அடிக்கும்.
அப்படி நடந்தால் ரஜினியை தேடி நிறைய தயாரிப்பாளர்கள் நிச்சயமாக வருவார்கள். அதனால் அடுத்தடுத்த படங்களில் இன்னும் அதிகமாகவே நடிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் கண்டிப்பாக இவருடைய பட்டத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார். ஏனென்றால் இது ரசிகர்களால் இவருக்கு கிடைத்த பொக்கிஷம். என்றுமே சூப்பர் ஸ்டார் என்றால் அது இவருக்கு மட்டும் தான் பொருத்தமாக இருக்கும்.