Rajini : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் எப்படி இருக்கும், லோகேஷின் எல்சியுவில் இடம் பெறுமா என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
ஆனால் இந்த படம் லோகேஷின் எல்சியுவில் இடம் பெறவில்லை. அதாவது ரஜினி இந்த படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக நாகர்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாகர்ஜுனா சட்ட விரோதமாக கடிகாரம் மற்றும் தங்க வியாபாரத்தை செய்து வருகிறார்.
இதை சத்யராஜின் மகளான ஸ்ருதிஹாசன் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்திவிடுகிறார். இந்த சூழலில் நாகார்ஜுனாவின் வில்லன் கும்பல் ஸ்ருதிஹாசனின் கொல்ல முயற்சிக்கின்றனர். அப்போது அவரைக் காப்பாற்ற தேவாவாக என்ட்ரி கொடுக்கிறார் ரஜினி.
கூலி படத்தின் கதை
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்த நிலையில் நாகர்ஜுனா மற்றும் ஷோபினை கொடூரமாக கொலை செய்கிறார் ரஜினி. விக்ரம் படத்தில் சூர்யா எவ்வாறு ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தாரோ அதேபோல் அமீர்கான் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறுகிறார்.
இதுதான் கூலி படத்தின் மொத்த கதை. இதில் பூஜா ஹெட்டே ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றம் கொடுத்திருக்கிறார். மேலும் படத்தில் நிறைய வன்முறையான காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இதனால் தான் கூலி படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் படத்தில் பல ட்விஸ்ட் காட்சிகளுடன் லோகேஷ் எடுத்திருக்கிறார். ஆகையால் தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களுக்கு காட்சிக்கு காட்சி விசில் சத்தமும், கைதட்டலும் காத்திருக்கிறது. இதனால் கூலியை கொண்டாட காத்திருக்கின்றனர்.