அடுத்த மூன்று வருடம் 600 கோடி.. ரஜினி போட்டிருக்கும் அசத்தல் பிளான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் சினிமாவில் இருந்து விலகப் போகிறார் என ஏகப்பட்ட பேச்சுகள் வந்திருக்கும் நிலையில் சத்தமில்லாமல் 600 கோடிக்கு அசத்தல் பிளான் போட்டுள்ள விஷயம் அவரது வட்டாரங்களில் கசிந்துள்ளது.

ரஜினிகாந்த் கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு கொண்டு வர சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம் ரஜினிகாந்த். வழக்கம் போல இந்த படத்துக்கும் 100 கோடி தான் சம்பளம்.

அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்ததிலிருந்து ரஜினிகாந்த் மீண்டும் சுறுசுறுப்பாக காணப்படுவதால் இன்னும் குறைந்தது மூன்று வருடங்களுக்கு நடிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் வருடத்திற்கு 2 படம் ரிலீஸ் செய்தே ஆகவேண்டும் என்கிற முடிவுக்கும் வந்துள்ளாராம் ரஜினிகாந்த்.

தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் இன்னும் மூன்று வருடங்களில் 6 படங்களில் நடித்தால் 600 கோடி சம்பளம் வாங்கி விடுவார். மூன்று வருடத்திற்குப் பிறகும் உடல்நிலை நல்ல முறையில் இருந்தால் இன்னும் சில வருடங்கள் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளாராம் ரஜினிகாந்த்.

அதே போல் இனி தன்னுடைய படங்களில் காதல் காட்சிகள் இருக்கக் கூடாது எனவும், அப்படியே இருந்தாலும் வயதுக்கு ஏற்ற காதல் காட்சிகள் தான் இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் எடுத்துக் கொள்ளப் போகிறாராம். இனி நான் நடிக்கப் போகும் படங்கள் எல்லாமே என்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களாக தான் இருக்கும் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் தெரிவித்துள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajinikanth-cinemapettai
rajinikanth-cinemapettai