Rajini’s thillu mullu Madhavi Latest photo: தமிழ் சினிமாவில் 80களில் இளசுகளின் கனவு கன்னியாக இருந்தவர்தான் நடிகை மாதவி. இவர் ரஜினியுடன் தில்லு முல்லு படத்தில்தான் அறிமுகமானார். அதன் பின் சூப்பர் ஸ்டார் உடனே தொடர்ந்து ஜோடி போட்டு நடித்து ஃபேமஸானார். அதோடு இவர் ஹிந்தியில் அமிர்தாப்பச்சனுடனும் நடித்திருக்கிறார்.
80, 90களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பிற மொழிகளிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்திலேயே நீச்சல் உடையில் எவ்வித தயக்கமும் இல்லாமல் நடித்த நடிகை மாதவி தான்.
பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கிய இவர், கிட்டத்தட்ட பத்து வருடங்களாக சினிமாவில் உச்சத்தில் இருந்தார். அதன் பின் இவருடைய படங்கள் பிளாப் ஆனது. இவரும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் இமயமலையில் இருக்கும் சாமியாரின் அறிவுரையின்படி, மாதவி அங்கு வந்த வெளிநாட்டு பக்தரை திருமணம் செய்து கொண்டார்.
மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படம்
இவர்களுக்கு அழகான மூன்று மகள்கள் இருக்கின்றனர். திருமணமான பிறகு சினிமா பக்கம் தலை காட்டாத மாதவி. தனது 27-வது திருமண நாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
இதைப் பார்த்ததும், ‘ரஜினியுடன் தில்லு முல்லு படத்தில் நடித்த மாதவியா இது!’ என பலரும் ஆச்சரியப்படுகின்றனர். இது மாதவிதானா என, கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், ஆள் அடையாளம் தெரியாமல் துரையம்மா போலவே மாறிவிட்டார்.
தில்லு முல்லு படத்தில் நடித்த மாதவியா இது!
