பிரமாண்டத்தை காமிக்க ராம் சரண் படத்தில் ஷங்கர் செய்யும் வெட்டி செலவுகள்.. ஊதாரிக்கு பொன்னும் துரும்புதான்

Shankar : பிரம்மாண்டத்திற்கு பேர் போன ஷங்கர் இப்போது தெலுங்கில் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தை எடுத்து வருகிறார். ஷங்கரின் படங்களில் எப்போதுமே பாடல்களிலேயே தனது பிரம்மாண்டத்தை காட்ட நினைப்பார்.

அவ்வாறு கேம் சேஞ்சர் படத்தில் ஜரகண்டி என்ற பாடல் உருவாகி இருக்கிறது. மார்ச் 27ஆம் தேதியான இன்று ராம்சரணின் 39 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த பாடல் வெளியாகி இருக்கிறது.

பின்னணியில் வண்ணமயமான வீடுகள் போல் செட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி இருவரும் படு பயங்கரமாக நடனம் ஆடி உள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் பட்ஜெட் 300 முதல் 400 கோடி என்று சொல்லப்பட்ட நிலையில் இந்த பாடலுக்கு மட்டும் கிட்டத்தட்ட 90 கோடி செலவழித்துள்ளார் ஷங்கர்.

அவ்வாறு இதில் என்ன சிறப்பு அம்சம் இருக்கிறது என்பதை பார்க்கலாம். பொதுவாக ஷங்கரின் படங்களுக்கு ஏஆர் ரகுமான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் தான் இசையமைப்பது வழக்கம்.

ஜரகண்டி பாடலில் 8 கோரியோகிராஃபர்

ஆனால் கேம் சேஞ்சர் படத்தில் தமன் இசையமைத்து உள்ளனர். மேலும் ஜரகண்டி பாடல் மட்டும் 8 கோரியோகிராஃபர் பணியாற்றி இருக்கின்றனர். நடன இயக்குனர் பிரபு தேவா, கணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்டிஸ், ஜானி மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஆனாலும் ஒரு பாடலுக்கு இத்தனை கோடி செலவு என்பது தேவையில்லாத ஒன்றுதான். ஊதாரிக்கு பொன்னும் துரும்பு என்பது போல பிரம்மாண்டத்தை காட்டுவதற்காக ராம்சரண் மற்றும் ஷங்கர் இருவரும் ஜரகண்டி பாடலுக்கு காசை வாரி இறைத்துள்ளனர்.

மேலும் கேம் சேஞ்சர் படம் தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ள நிலையில், சாட்டிலைட் உரிமை ஜீ தெலுங்கு நிறுவனம் வாங்கி இருக்கிறது.