அண்ணன் தம்பி ரெண்டு பேருமே காபி கேட்டுன்னு சொன்ன ராம் கோபால் வர்மா.. கைகலப்புக்கு பிள்ளையார் சுழி போட்ட பார்ட்டி

Manirathinam and Ram Gopal Varma: பொதுவாக மணிரத்தினம் இயக்கக் கூடிய படங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு வெற்றி இயக்குனராக இவருடைய படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார். அதனாலயே இவருடைய படங்களில் சிறு கேரக்டர் அமைந்தால் கூட பரவாயில்லை என்று பல நடிகர்கள் தவமிருந்து வருகிறார்கள்.

ஏனென்றால் இவர் படத்தில் நடித்து விட்டால் அந்த ஹீரோவுடைய ரேஞ்சே வேற லெவலுக்கு மாறிவிடும். அப்படிப்பட்ட இவரை வம்புக்கு இழுத்து தவறாக வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் ராம் கோபால் வர்மா. இவர் எந்த மாதிரியான ஒரு கேரக்டர் என்பது சமீபத்தில் ஒரு நடிகை உடன் இருந்த ஒரு விஷயம் பூதாகரமாக வெடித்தது அப்படிப்பட்ட குசும்புக்காரர்.

ஒருமுறை மணிரத்தினம் கொடுத்த பார்ட்டிக்கு ராம் கோபால் வர்மா போயிருக்கிறார். அந்த ஃபங்ஷனில் மணிரத்தினத்தின் அண்ணன் வெங்கடேசும் இருந்தார். அப்பொழுது மணிரத்தினம் மற்றும் அண்ணன் வெங்கடேஷை ரொம்பவே தப்பாக ராம் கோபால் வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார். அதாவது என்ன சொன்னார் என்றால் மணிரத்தினம் மற்றும் அவருடைய அண்ணன் வீட்டில் கேசட் லைப்ரரி அடுக்கி வைத்திருக்கிறார்.

Also read: தொடர்ந்து பிளாப் கொடுத்தும் ஜெயம் ரவி கையில் இருக்கும் 5 படங்கள்.. நடுத்தெருவில் விட்ட அண்ணன், தூக்கிவிடும் மணிரத்தினம்

அப்படி என்றால் ஏற்கனவே வெளிவந்த படங்களை பார்த்து அதை காப்பி கேட் பண்ணி தான் மணிரத்தினம் படத்தை எடுத்து வருகிறார். அதற்காகத்தான் நிறைய கேசட்டுகளை வாங்கி அதை பார்த்து காட்சியை வடிவமைக்கிறார் என்று மணிரத்தினத்தை தாறுமாறாக ராம் கோபால் வர்மா பேசியிருக்கிறார்.

இதை பார்த்த மணிரத்தினத்தின் அண்ணன் வெங்கடேஷ் கோபத்துடன் ராம் கோபால் வர்மாவுடன் சண்டை போட்டு பெரிய வாக்குவாதமே ஆகியிருக்கிறது. பிறகு அங்கே நடந்த பார்ட்டியில் பிரச்சனை பூதாகரமாக வெடித்து கைகளப்பாக முடிந்தது. சும்மா இருக்க முடியாமல் ஏதாவது வாயை திறந்து அங்கே பிரச்சினையை பண்ணி குளிர் காய்வதே இவருடைய பழக்கம்.

அந்த வகையில் மணிரத்தினம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் ஆமை மாதிரி உள்ளே புகுந்து பலரையும் கஷ்டப்படுத்தி அங்கு இருப்பவர்களிடம் வாய்க்கொழுப்பாக பேசி ஏழரை இழுத்திருக்கிறார். பிறகு இனிமேலும் இந்த பார்ட்டியில் இருந்தால் சரி வராது என்று மணிரத்தினத்தின் அண்ணன் வெங்கடேஷ் இவரை வெளியே அனுப்பி இருக்கிறார்.

Also read: கமலிடம் மாட்டி முழிக்கும் மணிரத்தினம்.. சிக்கலில் தவிக்கும் THUG LIfe