திருமணத்திற்கு பின் ஹிட் கொடுக்க திணறும் ரஞ்சித் பட ஹீரோ.. ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறதே

Director Pa Ranjith: பொதுவாக ஹீரோக்கள் தொடர்ந்து படங்கள் கொடுத்தால் சில வருடங்களிலேயே காணாமல் போய்விடுவார்கள். அவ்வாறு மிகவும் பரிச்சயமான நடிகர் ஒருவர் தோல்வி படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார். அவ்வாறு பா ரஞ்சித் பட ஹீரோ ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

திருமணத்திற்கு முன் ஒரு சில படங்களாவது வெற்றி பெற்ற நிலையில் இப்போது பட வாய்ப்பு வருவது குறைந்து விட்டதாம். ஆகையால் தற்சமயம் ஒரே ஒரு படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். அதாவது ஆர்யா தான் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். அவருக்கு கடைசியாக பெரிய அளவில் ஹிட் கொடுத்த படம் என்றால் ராஜா ராணி தான்.

அதன் பிறகு ஓடிடியில் வெளியானதால் சார்பட்டை பரம்பரை படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் வசூல் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இப்போது பட வாய்ப்பு கிடைக்காமல் பெரிய நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மோசமான தோல்வி அடைந்தது. இப்போது நிச்சயம் ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அதற்காக சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அதுவும் இப்படம் திரையரங்கு ரிலீஸுகாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இப்படம் மட்டும் ஆர்யாவுக்கு கை கொடுக்காமல் தோல்வியடைந்து விட்டால் தமிழ் சினிமாவில் நான்காம் தர கதாநாயகர்களில் சேர்ந்து விடுவார். எப்படியும் இந்த வாய்ப்பை நழுவ விட்டுக் விடக்கூடாது என்பதால் தன்னுடைய கடின உழைப்பை சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கு ஆர்யா போட்டு வருகிறாராம்.

திருமணத்திற்கு முன்பு தான் ஆர்யாவுக்கு படங்கள் தோல்வி அடைந்து வந்தாலும் சாயிஷாவை திருமணம் செய்து கொண்ட பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலைதான் தற்போது ஆர்யாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.