மொத்த காசையும் கென்னிஸ்ஸா மடியில் கொட்டிய ரவி மோகன்.. தாஜ்மஹால் கட்டிய ஷாஜகானை மிஞ்சிய துருவன்

ஆறு மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தனர். அப்பொழுது அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இப்பொழுது குட்டுக்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளது. ஜெயம் ரவி தரப்பு ஆர்த்தி பணக்கார வீட்டு பெண், செலவு நிறைய செய்வார் என கூறி வந்தனர்.

மறுபக்கம் ஆர்த்தி தரப்போ,அவர் பக்கம் உள்ள நியாயத்தை கூறி வந்தனர். ஆர்த்தியின் தாயார் ஒரு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.இவர் மருமகன் ஜெயம் ரவியை வைத்து பூமி, அடங்கமறு, சைரன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இப்படி பட தயாரிப்பு சம்பந்தமாக இருவருக்கும் நடந்த பிரச்சனைதான் விவாகரத்து வரை சென்று விட்டது என செய்திகள் வெளிவந்தது.

தற்சமயம் ஜெயம் ரவி மற்றும் கென்னிஸ்ஸா இருவரும் பொது இடங்களில் ஜோடியாக உலாவரத் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் இவர்கள் ஒன்றாக வந்திருந்தனர். இதுதான் இப்பொழுது பூதாகர பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

விளம்பர மாடல், பாடகி, ஹீலிங் தெரபிஸ்ட் என பல முகங்களைக் கொண்டவர் கென்னிஸ்ஸா. இவருடன் உள்ள நெருக்கம் காரணமாகவே ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிந்ததாக தெரிகிறது. ஜெயம் ரவி சம்பாதித்த பணத்தை எல்லாம் கென்னிஸ்ஸாவிற்கு தான் தாரவாத்துள்ளார். இருவரும் கோவாவில் டேட்டிங் உறவில் இருந்தார்கள்.

ஜெயம் ரவி 10 கோடி ரூபாய் கொடுத்து கென்னிஸ்ஸாவிற்கு மும்பையில் ஒரு பிளாட் வாங்கிக் கொடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் கோவாவில் இவருக்காக ஒரு கிளினிக்கும் வைத்து கொடுத்துள்ளாராம். அதற்கும் 5 கோடி ரூபாய்கள் செலவு செய்துள்ளார். சினிமாவில் வாங்கிய மொத்த சம்பளத்தையும் அவர் மடியில் கொட்டி, தாஜ்மஹால் கட்டிய ஷாஜகானையே மிஞ்சி விட்டார் நம்ம புது ரவி மோகன்.