வடிவேலு மற்றும் மணிரத்னம் இருவருமே இத்தனை வருடமாக சினிமாவில் இருந்தாலும் இருவரும் சேர்ந்து பணியாற்றாதது ஏன் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இயக்கத்தில் சிறந்தவர் மணிரத்னம். இன்றுள்ள இளம் இயக்குனர்களுக்கு கூட சவால் விடும் அளவுக்கு சிறந்த படங்களை எடுத்து வருகிறார். அதற்கு சான்று தான் செக்கச் சிவந்த வானம். செம கேங்ஸ்டர் படமாக உருவாக்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக மிகப்பெரும் பொருட்செலவில் பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட சரித்திரப் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளார்.
அதேபோல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நாயகனாக வலம் வந்தவர் வடிவேலு. இப்போதும் வடிவேலுவின் வருகைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் விரைவில் வடிவேலு படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க இருவருமே சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆன நிலையில் ஏன் சேர்ந்து பணியாற்றவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்தது. அதற்கு காரணம் வடிவேலுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை மணிரத்தினம் தன்னுடைய படங்களில் உருவாக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
எப்போதுமே நடிகர்களுக்காக கதை எழுதும் வழக்கம் மணிரத்தினத்திற்கு இல்லை எனவும், அதன் காரணமாகவே வடிவேலுவுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இப்போதுதான் படத்தோடு சேர்ந்து எதார்த்த காமெடிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் வடிவேலு உச்சகட்டத்தில் இருந்த காலகட்டங்களில் காமெடி தனியாக எடுத்து படத்தில் சேர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
