சமீபத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து அதிக அளவில் பேசப்பட்ட நடிகர் தான் சூர்யா. இவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களின் மனதில் நச்சென்று இடம் பிடித்து விட்டார். இதனைத் தொடர்ந்து இவரின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
மேலும் பாலா இயக்கத்தில் சூர்யா, வணங்கான் படத்தில் கமிட் ஆகி இருந்தார். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக அந்தப் படத்தில் சூர்யா தொடர்ந்து நடிப்பதில்லை என்று முடிவாகிவிட்டது. பின்பு வெற்றிமாறன் கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் விடுதலை படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். ஆனால் தற்பொழுது இந்த படமும் சூட்டிங் முழுவதுமாக முடிந்து விட்டது.
இதனால் வெற்றிமாறன் மற்றும் சூர்யா இவர்கள் இரண்டு பேருக்கும் ரூட் கிளியர் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் வாடிவாசல் படம் நீண்ட நாட்களாக இழுவையில் இருக்கிறது. அதனால் இந்த படத்தை மறுபடியும் எடுத்து இயக்குவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் தேவைப்படும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.
எதற்காக என்றால் வாடிவாசல் படத்தின் முதல் நாள் ஸ்டில்களுக்காக காளைமாடு ஒன்று வர வைக்கப்பட்டது. அது கட்டுக்கடங்காத சீறிப்பாயும் காளையாய் இருக்கிறதாம். ஏற்கனவே இந்த காளை, பட நடிகர் ஒருவரின் கையை பதம் பார்த்து விட்டதாம். அது மட்டும் இல்லாமல் சூர்யாவையும் முட்டுவதற்கு சென்று உள்ளதாம்.
இப்படி இருக்கையில் படப்பிடிப்பை தொடங்குவது மிகவும் கடினம் என்று இயக்குனர் முடிவு செய்ததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் படத்தில் காளையுடன், சூர்யாவிற்கு அதிக காட்சிகள் இருப்பதால் இப்படி காளை முரண்டு பிடிப்பது சரியாக இருக்காது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அதனால் காளை நன்றாக பழகிய பின்பு தான் சூட்டிங் வைக்க முடியும் என்று வெற்றிமாறன் என்று சொல்லிவிட்டார். இதனால் இந்த படப்பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்று தெரியவில்லை. இப்பொழுது சூர்யாவிற்கு வணங்கான் படமும் நின்றுவிட்டது. வாடிவாசல் படமும் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்று கேள்விக்குறியாக இருக்கிறது.