மணிரத்தினத்துக்கு துல்கர் குட்பாய் போட்டதுக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா? நூடுல்ஸ் போல் சிக்கி தவிக்கும் தக் லைஃப்

Reasons behind Dulquer bidding farewell to Mani Ratnam: தமிழ் திரைஉலகின் ஏகலைவனாக யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாது நேரடியாக இயக்கத்தை கையில் எடுத்தவர் மணிரத்தினம்.

முற்போக்கு சிந்தனை உடன் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து காலத்திற்கும் பேசும்படியான படங்களை படைத்தளிக்கும் இந்த மகானின் படைப்பில் அடுத்து உருவாக உள்ளது கமலின் தக் லைஃப்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக  சினிமா ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்த்த இக்கூட்டணி இப்போது இணைந்தது மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. 

தக் லைஃப்பில் கமலுடன் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி என பல முன்னணி நட்சத்திரங்களும்  கைகோர்த்தனர். துரதிஷ்டவசமாக துல்கர் இக்கூட்டத்தில் இருந்து நைசாக நழுவி போனார்.

இதற்குப் பின்னால் இருந்த காரணம் புரியாமல் சினிமா ஆர்வலர்கள் பலர் மணிரத்தினம் படத்தில் இருந்து துல்கர் விலகுவது துல்கரின் முட்டாள்தனமான முடிவு என்று விமர்சித்தனர்.

ஆனால் உண்மையான நிலவரம் வேறானது. டைட்டில் அறிவிப்பு மட்டுமே சுடச்சுட வந்து ரசிகர்களை ரசிகர்களின் ஹைப்பை எதிர வைத்தது.

ஆனால் அதன் பின்பு தக் லைஃப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இன்றி  ரசிகர்களை ஒருவித எதிர்பார்ப்புடனே வைத்துள்ளார் மணிரத்தினம்.

ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் இதே நிலைமை தானாம். யாருக்கும் முழுவதுமாக கதை கூறப்படுவதில்லை. துல்கருக்கு இந்த மாதிரியான ரோல் என்று எதுவுமே கூறப்படவில்லையாம்.

தக் லைஃப்பில் ஒரு கேரக்டர் என்று மட்டுமே சொன்னார்கள். தவிர மற்றபடி எந்த விஷயத்தையும் கூறவில்லையாம். அது மட்டும் இன்றி கால்ஷீட் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் கூறாமல் வெயிட்டிங்ல வைத்துள்ளனராம்.

இதனால் பொறுமை இழந்த துல்கர் காண்டாகி பல்வேறு காரணங்களை கூறி தக் லைஃப்பை விட்டு  நைசாக கழண்டு கொண்டார்.

தக் லைஃபில் துல்கருக்குப் பதில் சிம்பு 

துல்கர் ஏற்கனவே மலையாள படங்களில் பிசியாக உள்ளார். துல்கரின் நடிப்பில் லக்கி பாஸ்கர், வான் போன்ற படங்கள் கமிட் ஆகி, சைடு பை சைடு நடித்துக் கொண்டு வருகிறார்.  

பான்இந்தியா மூவியாக உருவாகி வரும் கல்கியிலும் இவரது பங்களிப்பு அதிகம் உள்ளது. பெரிய பட்ஜெட் படங்களாக பார்த்து நடித்துக் கொண்டிருக்கும் துல்கருக்கு தக் லைஃப் தலைவலியாய் மாறவே மணிரத்தினத்திடம் கூறி விலகிக் கொண்டார்.

தக் லைஃப்பில் துல்கருக்கு பதில் இவரது கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.