கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரெஜினா கெஸன்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் பிரபலமானார் அதற்கு காரணம் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து வந்த ரெஜினா அதன் பிறகு தமிழிலும் எப்படியாவது நிரந்தரமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என நினைத்து மாநகரம் போன்ற ஒருசில கதையம்சம் உள்ள படங்களில் நடித்தார்.
எப்போதுமே சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினாவிடம் ரசிகர்கள் பல கேள்வி கேட்பது வழக்கம். அதே போல் அவரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.

தற்போது ரெஜினாவிற்கு இந்த ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது என அவரது நம்பகத்தன்மை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் கல்லா கட்டி வரும் நடிகைகளில் ரெஜினா ஒரு முக்கியமானவர்.
இவருக்கு ஈகோ உள்ள பசங்களை சுத்தமாக பிடிக்காதாம். அதேசமயம் உண்மையும் நேர்மையும் உள்ள பசங்களை அதிகம் பிடிக்குமாம். இவர் சொல்வதைப் பார்த்தால் விரைவில் திருமணம் செய்து விடுவார் என பலரும் சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்