2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரெஜினா கஸன்ட்ரா. அதன்பிறகு சுமாரான படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.
தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு மளமளவென பட வாய்ப்புகள் குவிந்தாலும் சொதப்பினார்.
இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நேரடியாக வெப் சீரியஸில் களமிறங்கியுள்ளார். முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன.
அதில் இளம் நடிகர் ஒருவருடன் மேலாடையின்றி படுக்கை அறையில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளாராம். அவ்வப்போது சினிமாவில் நீச்சல் உடையில் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரெஜினா இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் வைரலாகி வருகிறது.
