நிவேதா பெத்துராஜிற்காக பல கோடி செலவு செய்த உதயநிதி.. வெட்ட வெளிச்சமாக்கிய ரிப்போர்ட்டர்

Udhayanithi-Nivetha Pethuraj: தற்போது அரசியலில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டிருக்கும் உதயநிதி அவ்வப்போது சில விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறார். அதில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருக்கும் விஷயம் புது சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது.

அதாவது உதயநிதி, நடிகை நிவேதா பெத்துராஜிற்காக பல கோடி செலவு செய்துள்ளதாக பத்திரிக்கையாளர் பாண்டியன் ஒரு பேட்டியில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் நிவேதா உதயநிதியுடன் இணைந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது அஜித் போல் கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் உதயநிதியிடம் அது தொடர்பாக ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதாவது சென்னையில் தனக்காக ஒரு கார் ரேஸ் ஏற்பாடு செய்யும் படி அவர் கேட்டிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட உதயநிதியும் மக்கள் வரிப்பணத்தில் அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளதாக பாண்டியன் கூறியுள்ளார்.

மேலும் மக்களின் கோரிக்கை உடனே பரிசீலிக்கப்படாது. அதுவே நடிகை என்றால் உடனே உதயநிதி காலம் தாழ்த்தாமல் செய்து கொடுத்து விடுவார். இல்லையென்றால் சண்டை வரும். ஏற்கனவே இந்த கார் ரேஸ் இயற்கை பேரிடர்களால் தள்ளிப்போனது.

அதனால் விரைவில் சென்னையில் நிவேதா பெத்துராஜின் கார் ரேஸ் நடைபெறும். அதை உதயநிதி செய்து கொடுத்து விடுவார் என பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளதால் தற்போது உதயநிதி தான் நிழல் முதலமைச்சராக செயல்படுவார்.

அதனால் நிவேதா பெத்துராஜ் போல் பல நடிகைகள் வந்தாலும் அவர்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது பாண்டியன் பகிரங்கமாக உதயநிதி பற்றி கூறி இருக்கும் இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.