Retro, Tourist Family : உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் தேதியை முன்னிட்டு சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசிகுமார் சிம்ரன் ஆகியோர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் வெளியானது. ரெட்ரோ படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதன் பிறகு நல்ல வசூலை பெற்று வருகிறது.
அதேபோல் டூரிஸ்ட் ஃபேமிலியும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. படம் வெளியான 4 நாட்களிலேயே கிட்டத்தட்ட 40 கோடியை தாண்டி வசூல் பெற்றுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய லாபத்தை கொடுக்க உள்ளது.
மேலும் பிரபலங்கள் பலரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் ரெட்ரோ படத்திற்கு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது புக் மை ஷோ என்ற இணையதளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ரெட்ரோ படம் 85 ஆயிரம் டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டிருக்கிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தால் ரெட்ரோவுக்கு நெருக்கடி
அதேபோல் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு 85 ஆயிரம் டிக்கெட் புக் செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு ஸ்கிரீன்கள் அதிகப்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ரெட்ரோ படத்திற்கு சமமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் புக்கிங் கிடைத்துள்ளது. இதனால் ரெட்ரோவின் வசூல் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.
சின்ன படம் தானே என்று டூரிஸ்ட் ஃபேமிலி படத்துடன் சூர்யா படத்தை வெளியிட்டது இப்போது சிக்கலாக அமைந்துள்ளது. தனியாக ரெட்ரோ படம் வெளியாகி இருந்தால் ஒரு நல்ல லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்கும்.