மீண்டும் இணையும் லவ் டுடே கூட்டணி.. அடுத்த 100 கோடி வசூலுக்கு கையில் எடுக்கும் கதை இதுதான்

குறைந்த பட்ஜெட்டில் 100 கோடி வசூலை தட்டி தூக்கி லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று விட்டார். இவர் அடுத்து என்ன படம் எடுப்பார் என ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அதற்கு முன் மறுபடியும் ஒரு 100 கோடியை வசூலிக்க வேண்டும் என பிரதீப் கையில் எடுத்திருக்கும் கதை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. லவ் டுடே தயாரிப்பாளருடன் ஒரு படத்தை இயக்கி இவரே கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படம் இன்ஜினியரிங் மாணவர்களின் கஷ்டங்களையும் மகிழ்ச்சிகளையும் படமாக எடுக்க இருக்கிறார். இதற்கு அடுத்து ஜெயம்ரவி உடன் மீண்டும் சேர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றி படம் இதுவரை இன்னும் அமையவில்லை.

அதனால் கோமாளி 2 படத்தை எடுக்க சொன்னதாக தகவல்கள் வந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமான கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக ஏற்கனவே நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் மறுபடியும் கோமாளி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இப்படி வரிசையாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் டாப் நடிகர்களுக்கு கடும் போட்டியாக மாறி உள்ளார்.

லவ் டுடே படத்திற்கு பிறகு அவர் இயக்கி நடிக்க இருக்கும் படத்தில் இன்ஜினியரிங் மாணவராக என்ட்ரி கொடுத்து, இளசுகள் விரும்பும் வகையில் படத்தை எடுத்து மறுபடியும் 100 கோடியை தட்டி துங்க வேண்டும் என்று வெறித்தனமாக ஸ்கிரிப்ட்டை தயாரித்துக் கொண்டிருக்கிறாராம்.