சுந்தர் சி தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ஆம் பாகத்தை எடுத்து வருகிறார். நியாயப்படி பார்த்தால் இந்த படத்தின் முதல் பாகத்தை எடுத்தவர் ஆர் ஜே பாலாஜி. அவர்தான் இந்த படத்தை இயக்கியிருக்க வேண்டும், இந்த படத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேசின் வேல்ஸ் நிறுவனம் தான்.
மூக்குத்தி அம்மன் முதல் பாகம் சூப்பர் ஹிட். அதனால் இதன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கும் நேரத்தில் ஆர்.ஜே பாலாஜி ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். ”நாம் தாம் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டோம் நம்மிடமே இப்படி கேட்கிறாரே” என ஐசரி கணேஷ் தயங்கியுள்ளார்.
இதனால் இந்த ப்ராஜெக்ட் இழுத்துக் கொண்டே போனது. இனிமேலும் காத்திருக்க முடியாது என ஆர் ஜே பாலாஜி மாசாணி அம்மன் என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து வேலையை தொடங்கினார். ஒரு பக்கம் ஐசரி கணேஷ் மூக்குத்தி அம்மன் டைட்டிலை வைத்திருக்கிறார்.
ஆர்கே பாலாஜி, மாசாணி அம்மன் என இதே கதையை எடுப்பதால் சுதாரித்துக் கொண்ட ஐசரி கணேஷ், சுந்தர் சி யை அழைத்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பாகத்தை உடனடியாக எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார். இப்பொழுது இந்த ப்ராஜெக்ட் தொடங்கியுள்ளது.
ஆர் ஜே பாலாஜி எடுக்கும் மாசாணி அம்மன் படத்தில் இப்பொழுது சூர்யா கமிட்டாகி நடித்துள்ளார். ஏற்கனவே ஃபீமேல் கதாபாத்திரத்தை வைத்து எடுக்க நினைத்திருந்த பாலாஜி இப்பொழுது அதை அப்படியே சூர்யாவிற்காக கதையை மொத்தமாய் மாற்றியுள்ளார். ஆக மொத்தம் இரண்டு பேரும் பெரிய ராஜாதந்திரிகளாக இருக்கிறார்கள்.