பிரமாதம்! சிங்கப்பூர் சலூனை வைத்து சக்க போடு போடும் ஆர் ஜே பாலாஜி டிரைலர், லோகேஷ் என்ட்ரி செம

Singapore Salon Trailer : ஆர்ஜேவாக தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இப்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் ஆர்ஜே பாலாஜி. அவருடைய எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்திருக்கிறார்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. மேலும் நீண்ட நாட்களாக இந்த படம் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில் வருகின்ற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. அதாவது ஆர்ஜே பாலாஜியின் தாத்தா சிங்கப்பூர் சலூன் என்ற கடை வைத்து முடி திருத்தம் செய்யும் தொழில் செய்கிறார். இதனால் சிறு வயதிலேயே ஆர்ஜே பாலாஜிக்கு இந்த தொழில் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

Also Read : வேல்ஸ் பிலிம்ஸால் கிடப்பில் கிடக்கும் 5 படங்கள்.. ஒரு வழியாக ஆர்ஜே பாலாஜிக்கு பிறந்த விடிவுகாலம்

கல்லூரி படித்து பெரிய வேலை வாய்ப்பு கிடைத்த போதும் அதில் சேர மனமில்லாமல் சலூன் கடை வைக்க முற்படுகிறார். இதனால் அவரது குடும்பம் மற்றும் காதல் ஆகியவற்றில் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு வழியாக இதை சமாளித்து பெரிய அளவில் சலூன் கடையை திறக்கிறார்.

இதுக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் வருகிறார். இந்த சூழலில் ஆர் ஜே பாலாஜியின் சலூன் கடையால் மற்றொரு பிரபல கடைக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதால் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் வெற்றி இங்கு கட்டாயம் என்ற ஆர்ஜே பாலாஜி அதற்காக போராடுகிறார். இப்போது சிங்கப்பூர் சலூன் டிரைலர் கவனத்தை பெற்றுள்ளது.

Also Read : பெயர் கூட தெரியாமல் சப்போர்ட் கேரக்டரில் பின்னும் 6 நடிகர்கள்.. அந்த நடிகரை விட்டுக் கொடுக்காத லோகேஷ்