Rj Balaji Singapore saloon Movie Twitter Review : ஆர்ஜே பாலாஜியின் படத்திற்கு சென்றால் 100% காமெடிக்கு பஞ்சம் இல்லை என்று தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரது படத்தை பார்க்க திரையரங்குக்கு வருகிறார்கள். அந்த வகையில் இன்று ஆர்ஜே பாலாஜியின் நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி உள்ளது. கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.

இப்போது இந்த படத்தின் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை எக்ஸ் தளம் வாயிலாக பதிவிட்டிருக்கின்றனர். மேலும் சிங்கப்பூர் சலூன் படத்தின் முதல் பாதி கலாட்டாவாகவும், இரண்டாம் பாதி எமோஷனலாக இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக இடைவெளி காட்சி வேற லெவலில் அமைந்துள்ளதாம்.

ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் கூட்டணி பட்டையை கிளப்பிய நிலையில் இந்த படத்திலும் அவர்களது காம்போ இணைந்துள்ளது. அதன்படி இன்டெர்வல் காட்சியில் சத்யராஜ் பின்னணி பெடல் எடுத்துள்ளார். ஆர்ஜே பாலாஜியின் நடிப்பு அருமையாக உள்ளது. ரோபோ சங்கர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
முதல் பாதி பக்கவாக அமைந்துள்ள நிலையில் இரண்டாம் பாதியில் சில இடங்களில் தொய்வு உள்ளதாக ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். மேலும் படத்தின் முதல் பாதி நேர்த்தியான நகைச்சுவையாக இருந்துள்ளது. ஆர்ஜே பாலாஜி, ரோபோ சங்கர் மற்றும் சத்யராஜ் மூவரின் நடப்பும் அபாரம்.

நடிகை மீனாட்சி சவுத்ரி திரையை அலங்கரித்துள்ளார். இப்போது உள்ள தலைமுறையினருக்கு சரியான கதையை கோகுல் கொடுத்திருக்கிறார். மேலும் படத்தில் ஈர்க்கும்படியாக இசை மற்றும் பாடல்கள் அமையவில்லை. முதல் பாதி நகைச்சுவையாகவும் இரண்டாம் பாதி ஊக்கமளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
