முதல்முறையாக டாடா கூட்டணியில் ஹீரோவாகும் RJ விஜய்.. செம்ம லவ் ஸ்டோரியா இருக்கே!

RJ Vijay play hero role and pair with Anjali Nair: சினிமாவில் ஒரு காலத்தில் ஹீரோ, ஹீரோயின் காதலை போராட்டமாக நடத்தி பின்பு கிளைமக்ஸ் இல் இணைவதோடு முடித்திருந்தனர். சில படங்களில் திருமணத்திற்கு பின் நடக்கும் பிரச்சனைகளை கையாண்டு இருந்தனர். இரண்டிற்கும் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் கல்யாணத்திற்கு பின்வரும் காதலை காட்டப் போகிறோம் என்று நியூ லவ் ஸ்டோரி யை ஹேமநாதன் கையில் எடுத்து உள்ளார்.

களத்தில் சந்திப்போம் இயக்குனர் ராஜசேகரின் உதவியாளராக இருந்தவர் தான் இந்த  ஹேமநாதன். முதல்முறையாக ஒலிம்பியா பிச்சர்ஸ் இன் டாடா கூட்டணியில் ஹீரோவாகிறார் RJ விஜய். இதற்கு முன் டான் படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பராக பலராலும் அறியப்பட்டவர் ஆர் ஜே விஜய்.

பன்முக திறமைகளை கொண்டு கலகலப்பாக பேசக்கூடிய ஆர் ஜே விஜய்க்கு என்று ரேடியோவில் தனியாக ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. ரியாலிட்டி ஷோ, டான்ஸ் ஷோ, புது படத்திற்கான பிரமோஷன் என எப்பவும் பிசியாக இருக்கும் விஜய் ரியல் லைப்பில் மனைவியின் பிறந்த  நாளுக்கு ரொமான்ஸ் பிளஸ் காமெடியாக ஆக கவிதை எழுதி வலைதளத்தில் பதிவிட்டு  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். ரீல் லைப்பில் கேட்கவா வேண்டும் இவரது வித்தையை.

நடிகையாக கட்டிக்கோடா என்று டாணாக்காரன் படத்தில் நடித்த அஞ்சலி நாயர் இதில் கமிட் ஆகியுள்ளார். இன்று தொடங்கப்பட்ட பெயரிடபடாத இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடத்தி அடுத்த ஆண்டு ஜனவரிக்குள்  படத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர் .

இன்று வரை நாயகன் மற்றும் நாயகியின் திருமணத்திற்கு பின் உள்ள படங்கள் யாவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் விளக்குவதாக அமைந்துள்ளது. இயக்குனர் இந்த படத்தை பற்றி பேசுகையில் “லவ் ஆஃப்டர் மேரேஜ்” என்ற ஒற்றை வாக்கியத்துடன் முடித்திருப்பது.  இது எப்படி சாத்தியம்? என்று இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

இப்படத்தில் துருதுருவென காமெடியில் கலக்கி வரும் ஆர் ஜே விஜய் ஆங்கர் ஆகவும்  வசீகரமான தோற்றத்துடன் கூடிய நாயகி அஞ்சலி நாயர் பாடகராகவும் நடிக்க உள்ளனர். கணவன் மனைவியாக காதல் கொஞ்சம், ஊடல் கொஞ்சம், கூடல் மிஞ்சி நடிக்க போவதாக செய்திகள் வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு பீல் குட் மூவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.