கடந்த சில நாட்களாகவே ரஜினியை பற்றிய செய்தி தான் மீடியாக்களில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் தேவையில்லாமல் வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் ரோஜா. அதன் விளைவாக தற்போது வெளியாகி இருக்கும் ஒரு போட்டோவால் அவர் படாதபாடு பட்டு கொண்டிருக்கிறார்.
அதாவது ரஜினி சில தினங்களுக்கு முன்பு என்.டி.ஆரின் நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் சந்திரபாபு குறித்து பேசியதை பார்த்த ரோஜா மோசமாக கருத்து தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ரஜினியை ஜீரோ என்றும் அவதூறாக பேசியிருந்தார். இதனால் கொந்தளித்துப் போன அவருடைய ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவையே ரணகளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் ரோஜா பேசிய இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினியை பற்றி குறை கூறுவது வானத்தைப் பார்த்து எச்சில் துப்புவதற்கு சமம் என்றும், வேண்டுமென்றே ரோஜா இப்படி அவதூறு பரப்புகிறார் எனவும் கருத்துக்கள் வெடித்து வருகிறது.
இப்படி கொழுந்து விட்டு எரியும் இந்த பிரச்சனையில் ரசிகர்களும் சில விஷயங்களை செய்து வருகின்றனர். அதாவது ரோஜாவுக்கு ஒருவர் பொது இடத்தில் வைத்து முத்தமிடும் போட்டோவை வெளியிட்டு அவரை சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அரசியல் பிழைப்புக்காக கீழ்த்தரமாக நடந்து கொள்பவர்கள் எப்படி பிறரை குறை சொல்ல முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்த வகையில் ரோஜா மன்னிப்பு கேட்டால் தான் இந்த பிரச்சனை முடியும் என்னும் அளவுக்கு இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிலும் தற்போது தீயாக பரவி வரும் அந்த போட்டோவை வைத்து பலரும் பல விதமாக பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் அந்த போட்டோவில் இருக்கும் நபர் ரோஜாவின் அண்ணன் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
பொது இடத்தில் ரோஜாவுக்கு முத்தம் கொடுக்கும் அண்ணன்

தங்கை மீது இருக்கும் அன்பின் காரணமாகவே அவர் முத்தமிட்டுள்ளார். அதை யாரும் தவறாக பார்க்க வேண்டாம் எனவும் ரோஜாவுக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் ரசிகர்கள் என்ன தான் அண்ணன், தங்கையாக இருந்தாலும் பொது இடத்தில் இப்படி முத்தமிடுவது சரி கிடையாது என்றும் கூறி வருகின்றனர். அந்த வகையில் ரோஜாவின் பேச்சு இப்போது அவருக்கே பிரச்சனையாக முடிந்திருக்கிறது.