S.Ve. Shekher: எஸ் வி சேகர் கட்சி விட்டு கட்சி தாவி வினோதமான ஒரு அரசியல் பயணத்தில் இருக்கிறார். யாராயிருந்தாலும் மனதில் பட்டதை பேசி அவர்களை விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வாடிக்கை தான்.
ஆனால் இப்போது வந்துள்ள சர்ச்சை அது கிடையாது. கலைஞர் டிவியில் மீனாட்சி சுந்தரம் தொடரில் இவர் நடித்து வருகிறார். அதில் வரும் ஒரு காட்சி தான் இப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகன் மருமகள் என இருக்கும் குடும்பத்தின் தலைவரான இவர் இளம் பெண்ணான ஹீரோயினை திருமணம் செய்து கொள்வதுதான் இந்த சீரியலின் கதை. தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் இவர்களுக்குள் எப்படி திருமணம் நடக்கிறது என்பது காட்டப்பட்டுள்ளது.
ஆனா சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா
அதெல்லாம் சரிதான் ஆனால் தாலியை கழுத்தில் தான் கட்டுவார்கள். முடிச்சு போட்டே ரெடிமேடாக இருக்கும் காட்சியை எந்த சீரியலிலும் பார்த்தது கிடையாது. ஹோட்டலில் சாம்பார் பாக்கெட்டை கட்டி வைத்திருப்பது போல் தாலியை ரெடியாக அவர் கையில் வைத்திருக்கார்.
ஹீரோயின் தலையை கொண்டு வந்து எதிர்பாராத விதமாக நுழைக்கிறார். அவ்வளவுதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. என்னங்க இது எனக்கு ஒண்ணுமே புரியல என வடிவேலு சொல்வது போல் இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
அதேபோல் அந்த பொண்ணு வயசு என்ன உங்க வயசு என்ன சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என எஸ் வி சேகரை ரோஸ்ட் செய்து வருகின்றனர். இருந்தாலும் மனுஷன் பிஜேபியை விட்டு வந்தப்புறம் நல்லா வாழுறாரு.
இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ என இணையவாசிகள் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர். உண்மையில் அந்த கட்சியை விட்டு வந்த அவர் இப்போது ஆளும் கட்சி பக்கம் இருக்கிறார். தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்று கூட கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் தான் சீரியலில் ஹீரோவாக அதுவும் இப்படி ஒரு கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததா. ஒருவேளை இருந்தாலும் இருக்கும் என இதையும் அவருடைய எதிர்ப்பாளர்கள் சர்ச்சை லிஸ்டில் சேர்த்துள்ளனர்.