Suriya : சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ரெட்ரோ படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கு முந்தைய படமான கங்குவா படம் தோல்வியை தழுவியதால் ரெட்ரோ படம் வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சூர்யா இருக்கிறார்.
ஒரு காலத்தில் சூர்யா பட வாய்ப்பை விஜய்யின் தந்தை எஸ்ஏசி தட்டி பறித்ததாக ஒரு செய்தி உலாவி கொண்டிருக்கிறது. அதாவது விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் தான் நண்பன்.
ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஆரம்பத்தில் சூர்யா தான் நடிக்க வேண்டியதாம். அவருக்கான போட்டோ சூட் எல்லாம் எடுத்து முடித்து விட்டனர். அந்த சமயத்தில் விஜய்யின் முந்தைய படங்களான சுறா, ஆதி, வில்லு, வேட்டைக்காரன் எல்லாமே தோல்வியை தழுவியது.
சூர்யாவுக்கு வந்த வாய்ப்பை பற்றி பறித்த எஸ்ஏசி
இப்படியே போனால் விஜய்யின் கேரியர் முடிந்துவிடும் என்பதால் எஸ்ஏ சந்திரசேகர் ஷங்கரிடம் சென்று நண்பன் படத்தை விஜய்க்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். பழசை மறக்க கூடாது என்பதால் ஷங்கரும் விஜய்யை வைத்து நண்பன் படத்தை எடுத்திருந்தார்.
அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி நல்ல வசூல் வேட்டையாடியது. அதோடு விஜய் கேரியரில் முக்கியமான படமாக இந்த படம் அமைந்துள்ளது. ஆனால் நண்பன் படத்தில் விஜய் பொருத்தமாக இருந்தார்.
ஆனால் அதில் சூர்யா நடித்திருந்தால் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது சந்தேகம்தான். ஆனால் தற்போது வரை ஷங்கர் மற்றும் சூர்யா கூட்டணியில் படம் அமையாமல் உள்ளது.