ரீ ரிலீஸ் இல் சச்சின் ஆடிய வசூல் வேட்டை.. கில்லி படத்தை மிஞ்சும் அளவிற்கு நடந்த சக்சஸ் மீட்

2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சச்சின் படத்தை இப்பொழுது ரீ ரிலீஸ் செய்து கொள்ளை லாபம் பார்த்து இருக்கிறது பட குழு. அப்பவே இளசுகள் அனைவரையும் சச்சினாக வலம் வந்து கட்டி போட்டார் விஜய். ஜெனிலியா மற்றும் வடிவேலு உடன் இணைந்து தளபதி செம லூட்டி அடித்து அசத்திய படம் சச்சின்.

இப்பொழுது அந்த படம் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் கொண்டாடும் விதமாக ஏப்ரல் 18ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இப்பொழுது வரை இந்த படத்திற்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. வசூலும் நல்ல லாபகரமாகவே அமைந்துள்ளது.

கலைப்புலி எஸ் தானு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு 8 கோடிக்கு மேல் செலவழித்து எடுக்கப்பட்டது இந்த படம். இப்பொழுது தமிழ்நாட்டில் படங்களை ரீ ரிலீஸ் கலாச்சாரம் பெருகி வருகிறது. அதன் மூலம் மீண்டும் நல்ல லாபம் பார்ப்பதால் இப்போது இதை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

சச்சின் படம் ரீ ரிலீஸ் செய்ததில்11 கோடிகள் வசூலித்துள்ளது. அதிலும் காசி தியேட்டரில் விடுமுறை நாட்களில் நாட்களில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகள் ஓடி வருகிறது. இதற்கு காரணம் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமைந்துள்ளது. அந்த படத்தில் வரும் பாடலுக்கு அனைவரும் குத்தாட்டம் போடுகிறார்கள்.

பல தியேட்டர்கள் விஜய் படத்தில் உள்ள மாஸ் பாடல்களை இந்த படத்தில் ஒளிபரப்பு செய்கிறார்கள். சச்சின் படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரன் ஒரு காட்சிக்கு சென்றுள்ளார். அவரைப் பார்த்ததும் அனைவரும் ஆரவாரம் செய்துள்ளனர். இப்படி ஒவ்வொரு நாளும் புதுப்புது சர்ப்ரைஸோடு தியேட்டர்கள் சிறப்பம்சங்கள் கொடுக்கிறது.