விஜய்யுடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி.. எந்த படம் தெரியுமா.?

Sai Pallavi : சாய் பல்லவி இன்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் இன்று இணையத்தில் உலாவி கொண்டிருக்கிறது. அவ்வாறு தான் விஜய் பட வாய்ப்பு சாய் பல்லவி மறுத்ததாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தான் விஜய். அவரது படத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பலரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் தான் ராஷ்மிகா மந்தனா விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வாரிசு படத்தின் மூலம் தீர்த்துக் கொண்டார்.

இப்படி இருக்கும் நிலையில் சாய் பல்லவி ஏன் விஜய் படம் வாய்ப்பை மறுத்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது லோகேஷ் இயக்கத்தில் உருவான லியோ படத்தில் தான் சாய் பல்லவியை நடிக்க வைக்க தயாரிப்பாளர் முடிவு செய்து இருக்கிறார்.

விஜய் பட வாய்ப்பு மறுத்த சாய் பல்லவி

ஆனால் அந்த கதாபாத்திரம் சாய் பல்லவியை திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லையாம். இதனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறிய நிலையில் அதன் பிறகு திரிஷா நடித்திருந்தார். மேலும் விஜய் இப்போது கடைசியாக ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆகையால் இதோடு விஜய் சினிமா பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் இனி சாய் பல்லவி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு என்பது இல்லாமல் போய்விட்டது.

ஆனாலும் சாய் பல்லவி நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அமரன் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த நிலையில் இப்போது ராமாயணா என்ற படத்தில் நடித்து வருகிறார்.