Saindhavi: திரையுலகில் எத்தனையோ விவாகரத்து அறிவிப்புகள் வந்திருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ந்து போனது ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து செய்தியை கேட்டு தான்.
கடந்த வருடம் இவர்கள் இருவரும் தங்களின் பிரிவை அறிவித்தார்கள். அப்போதிலிருந்து ஏகப்பட்ட சர்ச்சை செய்திகள் இவர்களை சுற்றியது.
ஆனால் இவர்கள் இருவரும் அமைதியோடு தங்கள் வேலையை பார்த்து வருகின்றனர். இவர்களின் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
தன்னம்பிக்கையோடு நடைபோடும் சைந்தவி
அப்போது கூட இருவரும் ஒரே காரில் வந்து சென்றது எல்லோருக்கும் ஆச்சர்யம் தான். இப்படி இருப்பவர்கள் எதற்காக பிரிய வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஆனால் ஏதோ ஒன்று அவர்களை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்திருக்கிறது. ஆனால் அந்த சூழ்நிலையிலும் கூட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசியது கிடையாது.
அதிலும் சைந்தவி பிரிவிற்கு பிறகு ஜி வி பிரகாஷ் நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது பற்றிய ப்ரோமோஷன் வீடியோவில் கூட ஜிவி சார் நடத்தும் நிகழ்ச்சிக்கு வாங்க என கூறி ஆச்சரியப்படுத்தினார்.
அது மட்டும் இன்றி விவாகரத்து ஒருபோதும் என் வாழ்க்கையை நிறுத்தாது என மனம் தளராமல் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியில் இவர் ஜட்ஜ் ஆக உள்ளார்.
அதேபோல் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இப்படி தன்னம்பிக்கையோடு தனக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார் சைந்தவி.
சமீபத்தில் ரவி மோகன், ஆர்த்தி பிரிவு மீடியாவில் பல சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. மாற்றி மாற்றி குறை சொல்லி, இருக்கும் பெயரை டேமேஜ் செய்து கொள்கிறார்கள்.
ஆனால் ஜிவி பிரகாஷ் சைந்தவி அப்படி இல்லாமல் பிரிவுக்கு பிறகும் கூட கண்ணியத்தோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.