தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் இவர் நடிப்பில் லவ் ஸ்டோரி, விராட பருவம், கார்கி, ஷியாம் சிங்கா ராய் போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது.
தொடர்ந்து வெற்றிப்படங்களை தந்து வருவதால் சாய் பல்லவி மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஷாம் சிங்காராய். இப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் வரவேற்கப்பட்டது.
மேலும் பிரம்மாண்டமாக உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஷியாம் சிங்கராய் படம் நானி மற்றும் சாய்பல்லவி இருவருக்குமே மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது.
தற்பொழுது இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சிறந்த காலகட்ட திரைப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் என்ற மூன்று பிரிவுகளில் ஆஸ்கர் விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாய் பல்லவி சாதாரணமாகவே நன்கு நடனமாட கூடியவர். தமிழில் தனுசுடன் இணைந்து இவர் அடியே ரவுடி பேபி பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஷாம் சிங்காராய் படத்தில் சாய் பல்லவி பாரம்பரிய நடனம் ஆடியுள்ளார்.
இதனால் சாய்பல்லவிக்கு ஆஸ்கர் விருது கண்டிப்பாக கிடைக்கும் என்ற அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல் சாய் பல்லவிக்கு ஆஸ்கர் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி காட்டுத்தியாய் பரவி வருகிறது. இதனால் இப்போதே சாய்பல்லவி ரசிகர்கள் மற்றும் ஷாம் சிங்காராய் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.