தொடக்கத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தின் மூலம் தோன்றி அதன் பிறகு கதாநாயகனாக வலம் வந்த விஜய் சேதுபதி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்து, அதன்பிறகு மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் தனது மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி இயக்குனர்கள் விரும்பும் வில்லனாகவே மாறிவிட்டார்.
இவர் விக்ரம் படத்தில் சந்தனம் என்ற வயதான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து இவருக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிகிறது. அந்த வகையில் அட்லி இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக அடுத்து நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அதற்கு அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு இயக்குனர் அட்லி ஆடிப்போய் இருக்கிறார். ஜவான் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி 21 கோடி சம்பளமாக கேட்டிருக்கிறார். இதுதான் இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே அவர் வாங்கும் மிகப் பெரிய தொகை.
இவர் இவ்வளவு தைரியமாக தனது சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் விக்ரம் படத்தில் அவருக்கு கிடைத்த பேரும் புகழும் தான். ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்த போது கிடைக்காத மார்க்கெட்டை தற்போது அவர் வில்லனாக அவதாரம் எடுத்த பிறகு தன்னுடைய சம்பளத்தை 15 கோடியில் இருந்து 21 கோடிக்கு அசால்டாக உயர்த்தி இருக்கிறார்.
இருப்பினும் விஜய்சேதுபதி ஜவான் படத்தில் நடித்தால், அது கூடுதல் பலம் என்று விஜய் சேதுபதி கேட்கின்ற சம்பளத்தை கொடுக்க அட்லி முடிவெடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு அட்லி விஜயை தவிர்த்து வேறு நடிகருடன் இணையும் முதல் படம் என்பதால் அவருக்கும் ஜவான் முக்கியமான படமே. படத்தில் இரு வேடங்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நயன்தாரா முதன் முதலாக பாலிவுட்டில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தற்போது ஹனிமூன் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நயன்தாரா, ஜவான் படப்பிடிப்பில் இணைவார். இவர்களுடன் விஜய் சேதுபதியும் ஜவான் படத்தில் மிரள விடப்போகிறது பாலிவுட் மட்டுமல்ல கோலிவுட் ரசிகர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.