Jailer: ஜெயிலர் படம் இந்த மாதம் வெளியாக உள்ளதால் இணையம் முழுக்க இப்படத்தை பற்றிய பேச்சு தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் சம்பள விபரம் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய் தான் முதல் இடத்தில் இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடி சம்பளம் பெறுகிறார். ஆனால் ரஜினி 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கி வந்த நிலையில் அடுத்தடுத்த பட தோல்வியால் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளார்.
அதன்படி ஜெயிலர் படத்திற்கு ரஜினி 90 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். அடுத்ததாக மிகப்பெரிய நட்சத்திரங்களான சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கேமியோ தோற்றத்தில் நடிப்பதால் சம்பளம் குறைவாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் சிவராஜ்குமார் 4 கோடியும், மோகன்லால் 8 கோடியும் பெற்றிருக்கிறார். ஆனால் மோகன்லால் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஜெயிலர் படத்தில் இடம்பெறுவார் என்று கூறும் நிலையில் 8 கோடி சம்பளமா என பலரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். மேலும் ஜாக்கி ஷெராப் கிட்டத்தட்ட 4 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார்.
ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்ததற்காக 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காவாலா பாடலில் அவர் ஆடிய குத்தாட்டத்திற்கே நிறைய கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் ரம்யா கிருஷ்ணன் 80 சம்பளமாக பெற்றிருக்கிறார். இவர்களைத் தவிர இன்னும் பல பிரபலங்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆகையால் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஜெயிலர் பட பிரபலங்களுக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்திருக்கிறார். இந்நிலையில் ட்ரெய்லர் வெளியான போது நிறைய படங்களின் சாயல் இப்படத்தில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆகையால் படம் வெளியாகி போட்ட பட்ஜெட்டை ஜெயிலர் எடுத்தால் தான் தலை தப்பும் என்ற பயத்தில் கலாநிதி மாறன் இருக்கிறார்.