சந்திரமுகி 2வில் லாரன்ஸ் வாங்கிய சம்பளம்.. அசால்டா வியாபாரம் பண்ணி கெத்து காட்டிய லைக்கா

Actor Raghava Lawrance: சினிமாவிற்குள் நடன இயக்குனராக அடி எடுத்து வைத்து கொஞ்ச கொஞ்சமாக ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் ராகவா லாரன்ஸ். ஆனால் இவர் நடித்த படங்கள் சொல்லும் படியாக பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. அதனால் இயக்குனராகவும் இவருடைய பாதையை தொடங்க ஆரம்பித்தார். அப்பொழுது பேய் கதையை வைத்து எடுக்க ஆரம்பித்து முனி என்ற படத்தை கொடுத்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா 1,2,3, போன்ற சீரியஸை தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து முழு நேரமும் நடிப்பதில் கவனத்தை மாற்றிவிட்டார். அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பி வாசு இயக்கி, லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

மேலும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் இப்படத்திற்கான ஆடியோ லான்ச் கடந்த வாரம் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் லாரன்ஸ் பேசியதில் ரஜினி சாரின் பெயரை கெடுக்காத அளவிற்கு வேட்டையன் கதாபாத்திரத்தை கவனமாக பார்த்து நடித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் 27 கோடிகள். இவருக்கு கொடுத்த சம்பளத்தை போலவே லைக்கா நிறுவனம் அப்படியே நெட்ஃபிக்ஸ்-க்கு விற்பனை செய்து இருக்கிறது. எப்படியாவது இப்படத்தை அதிகளவில் வியாபாரம் செய்து கெத்துடன் இருக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் முடிவு எடுத்து இருக்கிறது. அதற்காக அசால்டாக ஒவ்வொரு வேலையும் செய்து வருகிறது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து லாரன்ஸுக்கு கிட்டத்தட்ட 5 படங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. அது என்ன படங்கள் என்று தற்போது பார்க்கலாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து துர்கா, முனி படத்தின் தொடர்ச்சி மற்றும் காஞ்சனா படத்தையும் இயக்கி நடிப்பதாக ராகவா லாரன்ஸ் முடிவெடுத்து இருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.