சிக்கந்தர் எடுபடாத நிலை.. ரசிகர்களை நேரில் சந்தித்து அதிர்ச்சி கொடுத்த சல்மான் கான்

Salman Khan: ஏ ஆர் முருகதாஸ், சல்மான் கான் கூட்டணியில் உருவான சிக்கந்தர் கடந்த மாத இறுதியில் வெளியானது. பெரிதாக பிரமோஷன் செய்யப்பட்ட இப்படம் ஆடியன்ஸிடம் எடுபடவில்லை என்பதுதான் உண்மை.

200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் போட்ட காச கூட எடுக்கவில்லை. இப்படி அடிவாங்கும் என சல்மான் கான் நினைத்து கூட பார்க்கவில்லையாம்.

அதனால் படம் பார்த்தவர்களை நேரில் கூப்பிட்டு அவர் ஒரு சம்பவம் செய்திருக்கிறார். என்னவென்றால் இப்படம் பார்த்த நடுநிலை ஆடியன்ஸை ஒன்று திரட்டி அவரை சந்திக்க வைத்திருக்கின்றனர்.

ரசிகர்களை தன்னுடைய கேலக்ஸி அப்பார்ட்மெண்டில் சல்மான்கான் சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது படம் தோல்வி என்பதை ஒப்புக்கொண்ட அவர் என்னென்ன குறைகள் இருந்தது என கேட்டுள்ளார்.

சிக்கந்தர் எடுபடாத நிலை

ரசிகர்களும் திரைக்கதை பலவீனமாக இருந்தது உட்பட பல காரணங்களை சொல்லி இருக்கின்றனர். அதேபோல் சோசியல் மீடியாவில் காட்சிகள் லீக் ஆனது கூட காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது.

அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட சல்மான் கான் அடுத்த படங்களில் இதை சரி செய்வதாக உறுதியளித்திருக்கிறார். உண்மையில் இது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

எந்த ஹீரோவும் வெளிப்படையாக தன் பட தோல்வியை ஒப்புக்கொண்டது கிடையாது. அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார் சல்மான்கான்.

நம்ம ஊரிலும் பெரிய ஹீரோக்கள் இப்படி செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் இங்கே தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் படம் பார்த்தவர்களையே குறை சொல்லும் நிலைதான் இருக்கிறது.