மோசமான செயலுக்கு பதிலடி கொடுத்த சமந்தா.. நாக சைதன்யா மேட்டருக்கு வச்ச முற்றுப்புள்ளி

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இரு குடும்பத்தார் சம்மதுடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இது பத்திரிக்கையாளர்களுக்கு தீனியாக அமைய வாய்க்கு வந்தபடி எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்தில் இவர்களது விவாகரத்திற்கு என்ன காரணம் என்று விவாதிக்க தொடங்கினார்கள். இதைத்தொடர்ந்து சமந்தாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம், நாகச சைதன்யாக வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா நாக சைதன்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வந்தது.

இந்த சூழலில் பிரபல ஊடகம் ஒன்றில் இது குறித்து யார் யாருடன் வேண்டுமானாலும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் தனக்கு எந்த கவலையும் இல்லை என்றும், காதலில் அருமை தெரியாத ஒருவர் யாருடனோ, எத்தனை பேரிடமோ பழகினாலும் கண்ணீரில் தான் விட்டுவிடுவார்கள். மேலும் குறைந்தபட்சம் அந்தப் பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவரை துன்புறுக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்.

அப்படி நடந்து கொண்டால் எல்லோருக்கும் நல்லது என்று சமந்தா கூறியதாக இணையத்தில் ஒரு செய்தி அதிகம் பரவத் தொடங்கியது. இதை அடுத்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இதை நான் சொல்லவில்லை என பதிவிட்டுள்ளார். இதிலிருந்து சமந்தா நாக சைதன்யா மீது இன்னும் காதல் வைத்திருப்பது தெரிகிறது.

மேலும் சமந்தா சொன்னதாக பரவி வந்த இந்த பொய்யான செய்திக்கு ஒரு பதிவு மூலம் முற்றுப்பள்ளி வைத்துள்ளார். அது மட்டும் இன்றி சமந்தாவின் இந்த பதிவிற்கு கீழ் மீண்டும் நாக சைதன்யா மற்றும் சமந்தா இணைய வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆகையால் மீண்டும் இவர்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.