த ஃபேமிலி மேன் 2-வில் நடிக்க இந்தக் கொடுமை தான் காரணம்.. சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த சமந்தா

கடந்த சில வாரங்களில் ரசிகர்கள் மத்தியில் சமந்தாவின் பெயர் படுமோசமாக டேமேஜ் ஆனது. ஆனால் த ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் வெளியான பிறகு இந்த பொண்ணையா திட்டினோம் என ரசிகர்கள் கவலைப்படுகின்றனர்.

த ஃபேமிலி மேன் 2 ட்ரெய்லர் வெளியான போதே ஈழத்தமிழர்களைப் பற்றி தவறாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளதாக கொந்தளித்து பலரும் இதை தடை செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.

ஆனால் படக்குழுவினர் அந்த சீரியஸ் வெளியாகும்வரை மௌனம் காத்தனர். அதற்கு காரணமும் புரிந்து விட்டது. த ஃபேமிலி மேன் 2 வெளியான பிறகு எந்த ரசிகர்கள் சமந்தாவை திட்டினார்களோ அதே ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

சர்ச்சைகளின் போது மவுனம் காத்த சமந்தா தற்போது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தான் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்? என்பதையும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களின் கஷ்டத்தையும், ஈழப்போரில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை உள்ளடக்கிய ஆவணப்படம் ஒன்றை காட்டியதாகவும், அதைப் பார்த்ததும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்தபோதும் கூட அதைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை, தற்போது சொந்த நாடுகளில் தங்களது உடைமைகளை இழந்து மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் பலருக்கும் என்னுடைய கதாபாத்திரம் நியாயம் சேர்க்கும் என நம்பி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

samantha-tha-family-man-2-cinemapettai
samantha-tha-family-man-2-cinemapettai