சமந்தா வந்த புதிதிலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக இருந்தார். அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இந்த சூழலில் ஒரு நடிகைக்கு திருமணம் ஆகி விட்டாலே அவரது மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். ஆனால் சமந்தாவுக்கு விவகாரத்து ஆனவுடன் தான் மார்கெட் எகிற தொடங்கியது. அதாவது புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஐட்டம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். இந்த படத்திற்கும் சமந்தாவினால் மக்கள் பேராதரவு கொடுத்திருந்தனர். மேலும் நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு படு பிஸியாக சமந்தா வலம் வந்து கொண்டிருந்தார்.
அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில் சில நிறுவனங்களின் விளம்பரத்திலும் நடித்து கல்லா கட்டி வந்தார். ஆனால் சில நாட்களாக சமந்தா சமூக வலைதள பக்கத்தில் பதிவு போடுவதையே நிறுத்திவிட்டார். தற்போது சமந்தா வெளிநாடு சென்றுள்ளாராம்.
அதாவது சமந்தா சினிமாவுக்கு வந்த புதிதில் சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். அதிக வெளிச்சத்தில் நடிக்கும் போது ஏற்படும் அலர்ஜி காரணமாக சிலருக்கு இந்த பிரச்சனை ஏற்படும். அஞ்சான் படப்பிடிப்பின் போது இது போன்ற பிரச்சனை ஏற்பட வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி சினிமா வாய்ப்பினை பெற்று பெரிய நடிகையாக வளர்ந்தார். இப்பொழுது நல்ல நிலையில் இருக்கும் பொழுது மறுபடியும் இந்த நோய் இவருக்கு வந்துள்ளதால் தற்போது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு உடனடியாக வெளிநாடு சென்றுவிட்டார். இந்த பிரச்சனை எப்போது சரியாகி பழையபடி மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வோம் என்ற யோசனையில் சமந்தா உள்ளாராம்.