எப்புட்ரா, அட்டர் பிளாப்பான சமந்தாவின் படம்.. மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வெளிநாட்டு சம்பவம்

காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது, அதன் தொடர்ச்சியாக அரிய வகை நோய் பாதிப்பு என வரிசையாக அடி மேல் அடி விழுந்த சமந்தாவின் படங்களும் சமீப காலமாகவே படு தோல்வியை சந்தித்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் இப்போது ஆதரவாக வெளிநாட்டில் மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

சுமார் 65 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்த நிலையில், இப்போது கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் பல விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறது.

குணசேகரன் இயக்கத்தில் புராணக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சாகுந்தலம் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இதில் சகுந்தலையாக சமந்தாவும் துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்தனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தனது 25 வருட சினிமா பயணத்தில் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்ததே இல்லை என சாகுந்தலம் படத்தைக் குறித்து மிகவும் வருத்தத்துடன் கருத்து தெரிவித்தார். இது சமந்தாவிற்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் உழைப்பிற்கு கூலி கிடைத்தார் போல், வெளிநாடுகளில் இந்த படத்திற்கு பல விருதுகள் வரிசையாக கிடைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சாகுந்தலம் படத்திற்கு கேம்ஸ் உலக திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நீதா லுல்லாவிற்கு விருது கிடைத்திருக்கிறது. ஏற்கனவே நியூயார்க் இன்டர்நேஷனல் விருது வழங்கும் விழாவில் பெஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் மற்றும் பெஸ்ட் மியூசிக்கல் திரைப்படம் என்ற விருதுகளை வென்றது.

தற்போது பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் மற்றும் பெஸ்ட் காஸ்ட்யூம் டிசைனர், பெஸ்ட் இந்தியன் ஃபிலிம், பெஸ்ட் வெளிநாடு திரைப்படம் என்ற நான்கு பிரிவுகளில் இன்டர்நேஷனல் விருதுகளை வென்றது சாகுந்தலம் திரைப்படம்.