தீராத உடல் பிரச்சினை.. பல வருட கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

தமிழ், தெலுங்கு மொழிகளில் படு பிசியாக நடித்து வந்த சமந்தா சில மாதங்களாக உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். மயோசிடிஸ் என்னும் அரிதான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா தற்போது அதற்கான மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

மேலும் இந்த நோயால் தனக்கு என்னென்ன கஷ்டங்கள் இருக்கிறது என்பதையும் அவர் வருத்தத்துடன் பதிவிட்டு இருந்தார். இதனால் அதிர்ந்து போன ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் கூறி வந்தனர். இருப்பினும் அவர் இன்னும் முழுதாக குணமடையாததால் தொடர்ந்து மருத்துவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்.

அது மட்டுமல்லாமல் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்டுக்காக அவர் வெளிநாட்டுக்கு செல்லவும் திட்டமிட்டு இருக்கிறார். இதனால் தற்போது அவரால் எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள முடியாத நிலை இருக்கிறது. மேலும் அவர் தற்போது தன்னுடைய உடல் நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சில தியாகங்களையும் செய்ய இருக்கிறார்.

அதாவது தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் அவர் சில இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு ஓகே செய்து வைத்திருக்கிறார். ஆனால் இப்போது அந்த படங்களில் அவரால் நடிக்க முடியாத நிலை உருவாகிவிட்டது. அதனால் சமந்தா சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் வாங்கிய அட்வான்சை திருப்பி கொடுத்துவிடுகிறேன், என்னால் படங்களில் நடிக்க முடியாது என்று பேசி வருகிறாராம்.

இது தயாரிப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தாலும் அவருடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு தற்போது வேறு ஹீரோயினை அந்த படங்களில் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். இவ்வாறு தன்னுடைய தீராத உடல் பிரச்சனையால் சமந்தா மிகப்பெரும் தியாகத்தை செய்திருக்கிறார். ஏனென்றால் பல முன்னணி நடிகைகளுக்கும் பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கிறது.

தற்போது சமந்தாவுக்கு அந்த கனவு நினைவாக விட்டாலும் மீண்டும் புது உற்சாகத்துடன் நடிப்பில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வந்த குஷி திரைப்படம் இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் சமந்தா விரைவில் குணமடைந்து அந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறார்.