சமந்தா நடிப்பில் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளன. அதுவும் பல இயக்குனர்கள் சமந்தா நடித்தால் படம் வெற்றி பெறுகிறது என்பதற்காக தொடர்ந்து நடிக்க வைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் தயாரிப்பாளர்களும் சமந்தாவை நடிக்க அழைக்கின்றனர். இதனால் சமந்தாவிற்கு தற்போது ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து உள்ளன.
சமந்தா தற்போது கதாநாயகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து வந்தாலும் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதாவது ஒரு படத்தில் கதாநாயகர்களுக்கு எந்த அளவிற்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது அதே அளவிற்கு கதாநாயகிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை.
ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் படம் முழுவதும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இதனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களின் கதைகளை தேர்வு செய்து வருகிறார். சமந்தாவிற்கு தற்போது ஏகப்பட்ட மொழிகளில் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு வருகிறது.
தற்போது சமந்தா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். மேலும் ஹிந்தியிலும் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது. புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடல் நடனம் ஆடி தற்போது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளதால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு சம்பளத்தை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
சமந்தா இதுவரைக்கும் தன்னுடைய படங்களுக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று கொண்டு வந்தார். ஆனால் தற்போது படங்கள் வெப்சீரிஸ் என பல மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளதால் 1.5 கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்தி தற்போது 3.5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார்.
மேலும் சமந்தா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் சம்மதித்துள்ளனர். அந்தளவிற்கு சமந்தாவின் படங்கள் அதிகப்படியான வசூல் பெறுவதற்கு காரணம் என கூறுகின்றனர். தற்போது சமந்தா அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் என கூறி வருகின்றனர்.