சென்னை பல்லாவரத்தில் பிறந்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நாகார்ஜுனாவின் மருமகளாவும் பிரபல நடிகர் நாக சைதன்யாவின் மனைவியாகவும் டபுள் புரமோசன் பெற்று டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா.
பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு நடிகைகள் படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். அப்படியே நடித்தாலும் கட்டுக்கோப்பான குடும்ப குத்து விளக்கு போல் நடிப்பார்கள். இல்லையென்றால் பின்னாடி விவாகரத்து ஆகிவிடுமே. அந்த பயம்தான்.
ஆனால் சமந்தா மட்டும் அதற்கு விதிவிலக்கு. திருமணத்திற்கு பிறகு தான் அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி படங்களில் நடித்து வருகிறார். அதுவும் பெட்ரூம் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியான த ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சமந்தா அனைவரையும் போட்டுத் தள்ளியது நினைவிருக்கலாம். ஆனால் இந்த வெப்சீரிஸ் இலங்கை தமிழர்களை பற்றி விமர்சித்துள்ளதாக பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
இன்னும் அந்த பிரச்சனையை அடங்கிய பாடில்லை. இதற்கிடையில் மீண்டும் ஒரு வெப்சைட் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் சமந்தா. அதிலும் இதே போன்ற ஒரு முக்கிய பிரச்சினையை கையில் எடுக்க உள்ளார்.
ஏற்கனவே காட்டுத்தீ போல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைக்கு நடுவில் மீண்டும் இந்த மாதிரி ஒரு வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றால் உண்மையாவே சமந்தாவுக்கு பெரிய தைரியம் இருப்பதை காட்டுகிறது. இருந்தாலும் இது குறித்த சமந்தாவை என்ன சொல்லப் போகிறார்களோ என கவலையில் உள்ளார்களாம் அவரது ரசிகர்கள்.
