Samantha : சமந்தா ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். அவரது போதாத காலம் மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இப்போது தான் தேறி வந்திருக்கிறார். இதனால் சினிமாவில் பல வாய்ப்புகளை இழந்திருக்கிறார்.
அதேபோல் அவரது சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதாவது நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் சில வருடங்களிலேயே பிரிந்து விட்டனர்.
நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் சமந்தாவையும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த சூழலில் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டார்.
கஷ்ட காலத்தில் உதவிய ஒருவரைப் பற்றி பேசிய சமந்தா
ரசிகர்களை பார்த்து, நீங்கள் என் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள். உங்களை பார்க்கும் போது எனக்கு ஒரு எனர்ஜி வருகிறது. மேலும் கிட்டதட்ட ஒன்றரை வருடமாக நோயால் பாதிக்கப்பட்ட போது மாஸ்கோவின் காவிரி படத்தின் கதாநாயகன் ராகுல் ரவீந்திரன் தான் என்னை பார்த்துக் கொண்டார்.
மோசமான நேரத்தில் தன்னை சந்தித்து ஆறுதலும் கூறி வந்தார். அதனால் தான் என்னால் சீக்கிரம் குணமடைய முடிந்தது. எங்களுக்குள் இருப்பது நட்பு என்று சொல்ல முடியாது. அதையும் தாண்டி ஒரு சகோதரர் மாதிரி தான் ராகுல்.
என்னுடைய ரத்தம் தான் அவர் என்று பெருமையாக சமந்தா பேசியிருந்தார். மேலும் மீண்டும் சமந்தா சினிமாவில் ஒரு பிஸியான நடிகையாக வலம் வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.