சமந்தாவுக்கு ஹேப்பி பர்த்டே.. தயாரிப்பாளராக மாறி இருக்கும் பேபிமாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Samantha Networth: தனிப்பட்ட வாழ்க்கையில் சமந்தா பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார். உடல் நல பிரச்சனையில் தொடங்கி கல்யாணம் விவாகரத்து என கடந்த சில வருடங்களாகவே இவர் எதிர்நீச்சல் போட்டு வருகிறார்.

அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் சமந்தா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். அவருடைய இரண்டாவது இன்னிங்ஸை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவர் இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களால் பேபிமா என செல்லமாக அழைக்கப்படும் சமந்தாவுக்கு அனைவரும் ஹாப்பி பர்த்டே சொல்லி வருகின்றனர்.

அதே சமயம் இன்று அவருடைய புது பட அப்டேட் வரும் என்றும் தெரிகிறது. இந்த சூழலில் அவர் இதுவரை சேர்த்து வைத்த மொத்த சொத்து மதிப்பின் விவரம் பற்றி காண்போம்.

சமந்தாவுக்கு ஹேப்பி பர்த்டே

தற்போது இவர் ஒரு படத்துக்கு ஆறு கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். அதே போல் சுபம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.

மேலும் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் இவருக்கு பல கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களாக்கள் இருக்கிறது. அதேபோல் ஜாகுவார் XF உள்ளிட்ட வெரைட்டியான பல கார்கள் இருக்கிறது.

அதன் மதிப்பு மட்டுமே கோடிக்கணக்கில் இருக்கும். இப்படியாக சமந்தா 38 வயதில் சேர்த்து வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு 100-ல் இருந்து 110 கோடியாக இருக்கிறது.

இதில் அவர் விவாகரத்து பெற்றபோது ஜீவனாம்சம் வேண்டாம் என மறுத்துவிட்டார். இல்லையென்றால் நாக சைதன்யா மூலம் இன்னும் பல நூறு கோடிகள் அவர் கைக்கு வந்திருக்கும்.