அப்படி பண்ணா, இந்த நிலைமை எனக்கு வந்திருக்காது.. ஷாக் ஆன சமந்தா ரசிகர்கள்

ஆர்மாண்ட் ஹேமில்டன் இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் நிறுவனம் வெளியிட்ட செப்டம்பர் மாதத்தின் உலக அளவிலான பிரபல நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும், Citadel: Honey Bunny என்ற வெப் தொடரின் ப்ரமோஷனும் இதற்கு முக்கிய காரணம்.

இந்த தொடரில் சமந்தா ஒரு ரகசிய புலனாய்வாளராக நடித்துள்ளார். அவரது திறமையான நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளன. தற்போது, இந்த தொடர் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த புகழைத் தொடர்ந்து, சமந்தா பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

நான் அதை செய்திருக்க வேண்டும்…

சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்குப் பிறகு, நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலா இருவரும் பலமுறை ஒன்றாக வெளியில் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், இருவரும் காதலிப்பதாகவும், சமந்தாவை விட்டு பிரிய சோபிதா தான் காரணம் என்று சமந்தா ரசிகர்கள் கூறி வந்தனர். ‘

மேலும் நாகசைதன்யா சமந்தாவுடன் இருந்தபோதே சோபிதாவிடம் ரகசிய உறவிருந்துள்ளது, அது தான் திருமண முறிவுக்கு காரணம் என்றெல்லாம் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், சமந்தா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் கூறியது, ரசிகர்களின் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

“இந்த சீரிஸில் நீங்கள் ஸ்பை ஏஜெண்டாக நடித்தீர்களே… நிஜ வாழ்க்கையில் கூட ஸ்பையாக செயல்பட்டீர்களா?” என்று போட்டியாளர் கேட்க, அதற்க்கு பதிலளித்த சமந்தா.. “இல்லவே இல்லை.. நிஜ வாழக்கையில் நான் அப்படி இல்லை. இருந்திருந்தால், என் நிலைமை இப்படி இருந்திருக்காது” என்று கூறியுள்ளார்.

இது ரசிகர்களின் சந்தேகத்தை கொழுந்து விட்டு எரிய செய்துள்ளது. மேலும் விளக்கங்களை அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, இது நாக சைதனையவை குறிப்பிட்டு கூறியது போல தான் தெரிகிறது.

Leave a Comment