சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அழகும், திறமையும் அதிகம் பெற்ற சமந்தா டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். சாதாரணமாக நடிகைகளின் திருமணத்திற்குப் பிறகு அவர்களது மார்க்கெட் சரியா தொடங்கும். ஆனால் சமந்தா திருமணமாகி விவாகரத்து பெற்ற பின்பும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.
இவ்வாறு தனது தொழிலில் அடுத்தடுத்த வளர்ச்சி அடைந்து உயரத்திற்கு சென்று கொண்டிருந்த நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை சமந்தாவிற்கு மயோசிஸ்டிஸ் என்ற அரிய வகை நோய் ஏற்பட்டது. இதற்காக பல மாதங்களாக சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.
கடைசியாக சமந்தா நடிப்பில் வெளியான யசோதா படத்திற்காக ப்ரோமோஷனில் கலந்து கொண்டார். அதன்பின்பு உடல்நிலை மீண்டும் மோசமானதால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வருகின்ற 17ஆம் தேதி சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்காக சமீபத்தில் சமந்தா ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
அதில் ரசிகர்கள் முன் இந்த நோயால் தான் பட்ட கஷ்டங்களை கூறி கண்ணீர் விட்டார். இந்நிலையில் ஒரு ரசிகர் சமந்தா விவாகரத்தில் இருந்து தைரியமாக வெளியே வந்து, தன்னுடைய தொழிலில் பல உயரத்தை அடைந்தார். ஆனால் மயோசிடிஸ் என்ற நோயால் அவர் மீண்டும் பலவீனமாகிவிட்டார்.
அதுமட்டுமின்றி சமந்தா இந்த நோயினால் அழகையும், பளபளப்பையும் இழந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதாவது என்னைப் போலவே நீங்களும் பல மாதங்கள் சிகிச்சை, மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
மேலும் உங்களுடைய பிரகாசத்தை சேர்க்க என்னிடம் சில அன்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மிகுந்த மன கஷ்டத்தில் உள்ள போது ஆறுதல் கூறவில்லை என்றாலும் அவர்களின் மனதை புண்படுத்துவது மிகவும் வேதனை தரும் விஷயமாகும். ஆனால் அதையையும் சமந்தா தைரியமாக எதிர்கொண்டு உள்ளார்.