முன்னேற்றம் அடையாத சமந்தாவின் உடல்நிலை.. அடுத்த கட்ட சிகிச்சைக்காக எடுத்த அதிரடி முடிவு

தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா , தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவை சந்தித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் தான்மிகவும் மனம் தளர்ந்து விட்டதாகவும் நண்பர்களின் உதவியுடன் தான் மீண்டு வந்ததாகவும் பேட்டிகளில் கூறியிருந்தார். சமந்தா சமீபத்தில் தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக சமூகவலைதளங்களில் அறிவித்தார். இந்த நோயிலிருந்து குணமாக முறையான சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அந்த சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் தற்போது அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.

மேலும் சமந்தா தனது பர்சனல் வாழ்க்கையில் மிகவும் மனமுடைந்த நேரத்தில், தனது கேரியரில் ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடல் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றார். சமந்தாவை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

சமீபத்தில் சமந்தா நடிப்பில் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் யசோதா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட சமந்தா தனது உடல்நிலை குறித்து பேசியபோது கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் சமந்தாவின் உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், பெற்றார். அப்போதும் அவருக்கு உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்காமல் இருந்தது. ஆகையால் தற்போது திடீரென்று அவரது சிகிச்சை முறையை மாற்றி இருக்கிறார்.

அதன்படி வீட்டில் இருந்து ஓய்வு எடுக்கும் சமந்தா மருத்துவர்களின் அறிவுரைமூலம் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.