எமனுக்கே பயம் காட்டி வந்த சமந்தா.. பீனிக்ஸ் பறவை போல மாஸ் காட்டப் போகும் சிங்கப்பெண்

அழகும், திறமையும் ஒரு சேர்த்த சமந்தா சினிமாவில் மாஸ் காட்டி வந்தார். ஆனால் அவருடைய போதாத நேரம் சொந்த வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் மிகப்பெரிய சருக்களை சந்தித்தார். அதாவது நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் விவாகரத்து ஆனது.

ஆனாலும் சினிமாவில் சமந்தா கொடிகட்டி தான் பறந்தார். அப்போது மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மிகுந்த அவதிப்பட்டு வந்தார். அதன் பின்பு சிகிச்சை பெற்று இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோயிலிருந்து மீண்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா நடிப்பில் கடைசியாக யசோதா படம் வெளியானது.

இதைத்தொடர்ந்து சகுந்தலம் என்ற படம் இந்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த சூழலில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சமந்தா கலந்து கொண்டபோது சிலரால் கேலி, கிண்டலுக்கு உள்ளானார். அப்போதும் மனம் தளராத சமந்தா தன்னை கேலி செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து வந்தார்.

இப்போது எமனுக்கே பயத்தை காட்டி வந்த சமந்தா பீனிக்ஸ் பறவை போல் மாஸ் லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் பாலிவுட்டில் சமந்தாவுக்கு மிகப்பெரிய அறிமுகம் தந்த தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இயக்குனர்களின் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

samantha-cinemapettai

அதாவது ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாக உள்ள சிட்டாடல் வெப் சீரிஸில் சமந்தா நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் ஸ்டார் வருண் தவான் நடிக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸின் படப்பிடிப்பில் தற்போது சமந்தா கலந்து கொண்டு வருகிறாராம். இந்த வெப் சீரிஸின் மூலம் மீண்டும் தரமான கம்பக் கொடுக்க உள்ளார் சமந்தா.