Santhanam-Ajith: சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படம் மே 16ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதே தேதியில் தான் சூரி நடித்திருக்கும் மாமன் படமும் வெளியாகிறது.
இரண்டு காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறி நேருக்கு நேர் மோதுவது மீடியாக்களுக்கு சுவாரசியம் தான். இந்த படங்களில் எது அதிக கல்லாகட்டும் என்ற ஆர்வம் இப்போது அனைவருக்கும் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க எஸ் டி ஆர் 49 படத்தில் சந்தானம் நடிக்க இருக்கும் அறிவிப்பு வந்துவிட்டது. பட பூஜை கூட நடந்து முடிந்திருக்கிறது.
கடைசியில் நடந்த குழப்பம்
ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொன்னவர் சிம்புக்காக இறங்கி வந்து விட்டாரே என்று பலருக்கும் ஆச்சர்யம் தான். ஆனால் சிம்புவுக்கு முன்பே சந்தானத்தின் மனதை கரைத்தது அஜித் தான்.
இது பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. அஜித் விக்னேஷ் சிவன் இணையும் ப்ராஜெக்ட் திடீரென கைவிடப்பட்டது அனைவரும் அறிந்ததுதான். அதன் பிறகு விடாமுயற்சி வந்தது.
ஆனால் விக்னேஷ் சிவன் எழுதிய கதை முழுக்க முழுக்க காமெடி ஸ்கிரிப்ட். அதனால் அஜித் நேரடியாக சந்தானத்திற்கு போன் போட்டு நீங்க நடிக்கணும் என்று சொன்னாராம்.
முதலில் தயங்கிய சந்தானம் பிறகு நீங்க சொன்னா சரிதான் என சம்மதித்திருக்கிறார். ஆனால் இடையில் நடந்த குழப்பத்தால் அந்த ப்ராஜெக்ட் அப்படியே நின்று போனது.
இல்லையென்றால் சந்தானம் சில வருடங்களுக்கு முன்பே காமெடி ட்ராக்குக்கு வந்திருப்பார். ஆனால் இப்போது சிம்பு படத்தில் அவர் இரண்டாவது ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.