சந்தானம் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அதுவும் இவரது காமெடிக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். வடிவேலுக்கு பிறகு அந்த இடத்தை தக்கவைத்து கொள்வதற்கு பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் சந்தானம் தான் அந்த இடத்தை பூர்த்தி செய்தார். அந்த அளவிற்கு ஒரு தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் சந்தனம் பார்ப்பதற்கு ஹீரோ போல் இருப்பதால் ஒரு சிலர் நீங்கள் ஹீரோவாக நடிக்கலாம் என கூறினர். மேலும் இளம் இயக்குனர்களும் சந்தானத்தை வைத்து காமெடி படங்களை இயக்கத் திட்டமிட்டனர். அதனால் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தை விட்டுவிட்டு முழு நேர ஹீரோவாக நடித்து வந்தார்.
இவரது நடிப்பில் வெளியான தில்லுக்குதுட்டு போன்ற சில படங்கள் வெற்றி பெற்று வந்தாலும் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சந்தானத்திற்கு பெரிய அளவில் வெற்றி பெற்றுத் தரவில்லை அதனாலேயே சந்தானம் இனிமேல் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறி வந்தனர்.
தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் படத்தின் நிகழ்ச்சியில் சந்தானம் கலந்து கொள்வதற்காக ஆரியா கேட்டுக்கொண்டார். அதற்காகத்தான் நிகழ்ச்சிக்கு வந்தேன் என சந்தானம் கூறினார். மேலும் ஆர்யா இப்போது எந்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறாய் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு சந்தானம் நான் சும்மா தான் இருக்கிறேன் என சொல்லியுள்ளார்.
அதற்கு ஆர்யா சும்மா தானே இருக்கிறாய் அதனால் நிகழ்ச்சிக்கு வந்து சும்மா இருந்து போகுமாறு சொன்னதாக காமெடியாக தெரிவித்தார். மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன் 2 இரண்டாம் பாகத்தில் காமெடியாக நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை சந்தானமே கூறியுள்ளதால் இனிமேல் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறி வருகின்றனர். அதனால் சந்தானத்தை வைத்து ஹீரோவாக படம் இயக்க இருந்த இயக்குனர்கள் தற்போது சூரி பக்கம் செல்ல இருப்பதாக கூறி வருகின்றனர்.