நண்பன் ஆர்யாவுக்கு லாபத்தை கொடுத்தாரா சந்தானம்.? டிடி நெக்ஸ்ட் லெவல் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

DD Next Level Collection: ஆர்யா தன் நண்பன் சந்தானத்தை வைத்து டிடி நெஸ்ட் லெவல் படத்தை தயாரித்துள்ளார். நேற்று வெளியான படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

தில்லுக்கு துட்டு சீரிஸ் வரிசையில் இப்படமும் இணைந்துள்ளது. ஆனால் முந்தைய பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை ஒப்பிடும் போது இதில் கொஞ்சம் குறைவு தான்.

ஆனாலும் படம் ஒருமுறை தாராளமாக பார்க்கும் ரகமாக தான் இருக்கிறது. செல்வராகவன், கௌதம் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் என பெரும் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

அதேபோல் அவர்களுடைய பர்பாமன்ஸ் குறை சொல்லும் படியாக இல்லை. அதிலும் மொட்டை ராஜேந்திரன் ஸ்கோர் செய்துள்ளார்.

முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

இப்படியாக படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்து முதல் நாளிலேயே கேக் வெட்டி வெற்றியை கொண்டாடி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது படக்குழு.

அதன்படி டிடி நெக்ஸ்ட் லெவல் முதல் நாளில் 2.85 கோடிகளை வசூலித்துள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் கோடை விடுமுறை என்பதால் இந்த வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.

இப்படத்துடன் சூரி நடித்த மாமன் படமும் நேற்று வெளியானது. அப்படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில் போகப் போக யார் வசூல் கிங் என தெரிய வரும்.