Santhanam-Vijay: சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகி இருக்கிறது. வழக்கம் போல காமெடி அலப்பறையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 16ம் தேதி திரைக்கு வருகிறது.
அதற்கான பிரமோஷன் வேலைகள் கடந்த ஒரு வாரமாக சூடு பிடித்துள்ளது. அதில் சந்தானம் தன் திரை வாழ்வில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்களையும் பகிர்ந்து வருகிறார்.
அதில் தலைவா பட ரிலீஸ் பிரச்சனை பற்றியும் அவர் பேசியுள்ளார். இந்த பிரச்சனைக்கு காரணமே நான் படத்தில் பேசிய டயலாக் தான்.
போற போக்குல கொளுத்தி போட்ட சந்தானம்
விஜய்யை சந்தித்தபோது சந்தானம் என்னண்ணே இவ்வளவு லேட்டா படம் ரிலீஸ் பண்றோம் என கேட்டு இருக்கிறார். உடனே அவர் எல்லாம் உன்னால தான்யா.
நீ போற போக்குல கொளுத்தி போட்டுட்டு போயிட்ட இவ்ளோ பிரச்சனை ஆயிடுச்சு என சொல்லியிருக்கிறார். அதாவது படத்தில் அரசியலுக்கு வரக்கூடிய எல்லா தகுதியும் உனக்கு இருக்கு என அவர் ஒரு டயலாக் சொல்லி இருப்பார்.
அதுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இதை சந்தானம் இப்போது ஜாலியாக சொல்லி இருக்கிறார்.
மேலும் முதல் முதலில் விஜய்யை அரசியல் சம்பந்தப்படுத்தி டயலாக் பேசியது நான் தான் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே தலைவா பட பிரச்சினை அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இப்படி ஒரு விஷயம் சந்தானம் மூலம் வெளிவந்திருக்கிறது.