Santhanam : சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் மே 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷனில் தற்போது சந்தானம் படு பிஸியாக இருக்கிறார். அவருக்காக ஆர்யா, சிம்பு போன்றோர் ப்ரமோஷன் செய்து வருகிறார்கள்.
அதோடு சிம்புவுக்காக மீண்டும் காமெடியனாக நடிக்க சந்தானம் ஒத்துக் கொண்டுள்ளார். இவ்வாறு நட்புக்காக எதையும் செய்யத் துணியும் சந்தானம் இப்போது உதயநிதிக்காக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய இருக்கிறாராம்.
இதை அவரே நேரடியாக சொல்லி இருக்கிறார். அவ்வாறு தான் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சார மேடைகளில் விஜயகாந்தை எதிர்த்து பேசியிருந்தார். இது வடிவேலுக்கு தான் பின்னடைவை கொடுத்திருந்தது.
விஜய்க்கு எதிராக செயல்படும் சந்தானம்
அதேபோல் இப்போது உதயநிதிக்கு ஆதரவாக சந்தானம் பிரச்சாரம் செய்தால் கண்டிப்பாக விஜய்யை எதிர்த்து தான் பேச வேண்டும். விஜயுடன் சந்தானம் பல படங்களில் சேர்த்து நடித்திருந்தாலும் அவரை எதிர்த்து பேசும் சூழல் ஏற்படும்.
இதனால் விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக சந்தானத்தின் மீது கோபம் கொள்வார்கள். ஆகையால் சந்தானத்தின் படங்களுக்கு கூட மிகப் பெரிய ஆபத்து வர வாய்ப்பு இருக்கிறது. இப்போது தான் சந்தானம் சில ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
இந்தச் சமயத்தில் வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக சந்தானம் பிரச்சார மேடையில் இறங்குவேன் என்று கூறியிருக்கிறார். இது அவரது சினிமா கேரியரை எந்த அளவுக்கு பாதிக்க உள்ளது என்பது போகப் போகத்தான் தெரியும்.